பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பயணத்திட்டம் மாற்றப்பட்டு சாலைவழியாக அவர் செல்ல நேர்ந்ததும், அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் விவசாயிகளின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதும் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு என்று உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உளவுத்துறையினர் கூறிய எந்த வித ஆலோசனையையும் பஞ்சாப் போலீசார் பின்பற்றவில்லை என்றும், உச்சப்பட்சப் பாதுகாப்புக்கான எந்த சட்ட விதிமுறைகளும் மதிக்கப்படவில்லை என்றும் சாடியுள்ள உள்துறை அமைச்சகம், இது குறித்து விளக்கம் தருமாறு உத்தரவிட்டுள்ளது.
தமது பயணத்தை ரத்து செய்து திரும்பிய மோடி, உயிருடன் அனுப்பி வைத்த பஞ்சாப் முதலமைச்சருக்கு நன்றி என்று குறிப்பிட்டிருப்பது பாஜக- காங்கிரஸ் இடையே கடும் சொற்போரை வலுக்கச் செய்துள்ளது.