'புல்லி பாய் ஆப்' வழக்கில் 18 வயது இளம்பெண் மற்றும் இளைஞரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தரகாண்டில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணை மும்பை அழைத்து வந்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட மதப் பெண்களை அவதூறு செய்யும் புல்லிபாய் ஆப் விவகாரத்தில் 21 வயது பொறியியல் மாணவர் விஷால் குமார் என்பவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த பெண் கைது செய்யப்பட்டார்.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பானதாகக் கூறப்படுகிறது. பெண்கள் சிலர் தங்கள் படங்கள் மார்பிங் செய்யப்பட்டு விற்பனைக்கு என விளம்பரப்படுத்தப்படுவதாக புகார் அளித்தனர்.
கடந்த ஆறுமாதங்களாக விசாரணை நடத்திய மும்பை சைபர் கிரைம் போலீசார், பெண்களின் புகைப்படங்கள் மார்பிங் செய்து பரப்பப்படுவதைக் கண்டுபிடித்தனர். இதன் மூளையாக செயல்பட்ட குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் 18 வயது இளம்பெண் சிக்கியுள்ளார்.