மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்துக் கொண்டு முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார். கொரோனா மீண்டும் வேகம் எடுத்து 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஒமைக்கரான் பரவலும் அதிகரித்து வரும் சூழலில் இன்று அதனை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சரவை கூடுகிறது. இது தவிர மருத்துவ நிபுணர்க் குழுவுடனும் மோடி ஆலோசனை நடத்த உள்ளர்.
கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் காணொலி வாயிலாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில்தான் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் நேரடி அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இப்போது மீண்டும் காணொலி வாயிலாக இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.