கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோரை தவிர மற்ற அரசு பணியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோரில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்கள் மீண்டும் முழு இருக்கை வசதியுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.