விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்யவும் திட்டம் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள புத்தாண்டு அறிக்கையில், ககன்யான் திட்டத்தின் முதல்படியாக நடப்பாண்டு முதல் ஆளில்லா பயண திட்டத்தை தொடங்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக விகாஸ் இன்ஜின், கிரையோஜெனிக் ஸ்டேஜ், க்ரூ எஸ்கேப் சிஸ்டம் போன்றவற்றை சோதனை செய்யும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் பொதுவான விண்வெளிப் பயிற்சியை இந்திய வீரர்கள் முடித்து விட்டதாகக் கூறியுள்ள சிவன், சூரியனுக்கான இந்திய விண்கலமான ஆதித்யா எல்1 முதற்கட்ட சோதனை முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.