சட்டிஸ்கரில் ஜாங்கிர் மாவட்டத்தில் உள்ள மாட்வா மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக நீடிக்கும் இப்போராட்டம் நேற்று வன்முறையாக வெடித்தது. கோவிட் பரவலைக் காரணம் காட்டி போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை பலவந்தமாக அகற்ற போலீசார் முயன்றபோது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி விரட்டியடித்தனர். தொழிலாளர்கள் கல்வீசித் தாக்கியதில் 20 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.