கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 50 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீரங்கனஹள்ளி கிராமத்தில் உள்ள கங்கம்மா ஆலயத்தில் புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சித்ரன்னா கேசரிபாத் உள்ளிட்ட உள்ளூர் உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
அவற்றை வாங்கி சாப்பிட்டவர்களில் 50 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரசாத உணவுகளின் மாதிரிகளை சேகரித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீனிவாசபுரா தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.