அரசு பயன்பாட்டுக்கு மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை மட்டுமே விலைக்கு வாங்கவோ அல்லது வாடகைக்கு அமர்த்தவோ வேண்டும் என மகாராஷ்டிரச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
மாசில்லாப் போக்குவரத்துக்காக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.
அரசு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள் ஏப்ரலுக்குப் பதில் ஜனவரியில் இருந்தே விலைக்கு வாங்கும் அல்லது வாடகைக்கு அமர்த்தும் வாகனங்கள் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது.