நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றால் 284 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு 9 ஆயிரத்து 249 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், நாடு முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதேபோல் நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 525ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 460 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 351 பேருக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.