ஜம்முவில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி மலைக்கோவிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தின் அதிகாலையில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் திரண்ட நிலையில் பக்தர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கோவில் நிர்வாகம் எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.