உத்தரப்பிரதேச தேர்தலில் தாம் போட்டியிடும் தொகுதி எது என்பதை பாஜக மேலிடம் முடிவு செய்யும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகி, சமாஜ்வாதி கட்சித் தலைவர்களை சாடினார். 403 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் 300 இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்த அவர், பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்று தாம் நம்புவதாகத் கூறினார்.
ஒமைக்ரான் பாதிப்பு பரவ வாய்ப்புள்ளதால் தேர்தலை விரைவில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் யோகி வலியுறுத்தினார்.