அரியானா மாநிலத்தில் கல்குவாரியில் மண் சரிந்து விழுந்த தில் 4 பேர் உயிரிழந்தனர்.அந்த மாநிலத்தின் பிவானி பகுதியில் உள்ள கல் குவாரியில் இன்று காலையில் தொழிலாளர்கள் பலர் கல்லை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எந்திரங்களை பயன்படுத்தி அவர்கள் பணியை மேற்கொண்டனர். அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், நான்கு பொக்லைன் எந்திரங்கள் உள்பட 12 எந்திரங்களும் மண்ணில் புதையுண்டன.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மண்ணில் புதைந்து கிடந்த 4 பேரின் உடல்களை மீட்டனர். இது தவிர காயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.