நாடுமுழுவதும் வாசிர் எக்ஸ் என்ற கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 70 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிட்காயின், ரிப்பிள், இத்தேரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் வாசிர் எக்ஸ் போன்ற வர்த்தக தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டி வசூலிப்பதாகவும், அதனை மத்திய அரசுக்கு செலுத்தவில்லை என்றும் புகார்கள் எழுந்தது.
இதனை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வாசிர் எக்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்ட நிலையில், பிற கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனங்களிலும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.