இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது டோஸுக்கு விண்ணப்பிக்கும் முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் மருந்து மட்டுமே பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட பின் குழந்தைகள் அரை மணி நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியிறுத்தி உள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.