இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கங்குலி கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலிக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கங்குலி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டது குறிப்பிடதக்கது.