காஷ்மீரில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் அடில் அலி மற்றும் ஆசிப் குல்சார் ஆகிய தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் முக்கியப் பொருப்பில் இருப்பதாகவும், அவர்களிடமிருந்து வெடி மருந்துகளும், ஆயுதங்களும், முக்கியமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.