ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம் பேட்டரியால் இயங்கும் இரண்டு புதுவகை சைக்கிள்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. F2i வகை சைக்கிளின் விலை நாற்பதாயிரம் ரூபாய் என்றும், F3i வகை சைக்கிளின் விலை 41 ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளது.
இந்த சைக்கிளில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 35 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லலாம். 7 கியர்கள், 100 மில்லிமீட்டர் சஸ்பென்சன், டுயல் டிஸ்க் பிரேக்ஸ், புளூடூத் இணைப்பு எனப் பல்வேறு சிறப்புக் கூறுகளை இந்த சைக்கிள்கள் கொண்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள 600 ஹீரோ லெக்ட்ரோ விற்பனையாளர்களிடமும், இணையவழி விற்பனை முகவர்கள் மூலமாகவும் சைக்கிள்களை வாங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.