ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வருகிற 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையாக இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும், இரவில் கூட்டம் கூடுவதையும், தேவையற்ற பயணங்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என கேரள அரசு அறிவுத்தியுள்ளது. இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்திலும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.