கோவாக்ஸின் தடுப்பூசி சிறார்களிடம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் அரோரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவதால் இரண்டு நன்மைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் போது தொற்றைத் தடுக்க முடியும் என்றும், அவர்கள் மூலம் வீடுகளில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் கூறினார். தற்போது 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் அரோரா தெரிவித்தார்.