மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமலாகவுள்ளது. ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக உத்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
அதன் படி, திருமண நிகழ்ச்சியில் 200 பேருக்கு மேல் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.