சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் இரண்டு நாள் ராணுவக் கமாண்டர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்ற பின்னர் ராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நரவனே, ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதலில் சாதாரண குடிமக்களும் காவல்துறையினரும் குறிவைத்து தாக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்தார்.
இதே போல் லடாக் எல்லையில் சீனப்படைகள் நிலவரம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.