சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவ ஆக்சிஜனை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் தொடங்கி வைத்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய ஆக்சிஜன் செயல் முகவர் திட்டத்தின் பயிற்சியை தொடங்கி வைத்த இணை அமைச்சர், மருத்துவ ஆக்சிஜனை திறம்பட பயன்படுத்த பயின்றவர்களை கொண்டிருப்பதன் மூலம் மருத்துவமனைகளில் தேவையற்ற ஆக்சிஜன் விரயங்களை தவிர்க்கலாம் என்றார்.
அரசால் அனுமதி அளிக்கப்பட்ட ஆக்சிஜன் தயாரிப்பு மையங்களில் ஆயிரத்து 463 மையங்களில் செயல்படத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.