உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில், நபர் ஒருவர் தலையில் அணிந்த விக்கிற்குள் புளூ டூத் கருவி வைத்து பிட் அடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தேர்வு எழுத வந்த வாலிபர் மோசடியில் ஈடுபடுவதை கவனித்த காவலர்கள் அவனை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவன் அணிந்திருந்த பெரிய விக்-ஐ கழற்றிய காவலர்கள், அதற்குள் புளூ டூத் கருவி இருப்பதை கண்டுபிடித்தனர்.
குறுக்கு வழியில் தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து அதி புத்திசாலித்தனமாக யோசித்த அவன், இரண்டு காதுகளிலும் மிகச் சிறிய ear phoneகளை சொருகி வைத்த நிலையில், அவற்றை வெளியே எடுக்க முடியாமல் அவதி அடைந்தான்.
இந்த காட்சிகளை உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ரூபின் ஷ்ரமா என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது வைரலாகி வருகிறது.