2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பாதிப்புகள், ஊரடங்குகளுக்குப் பிறகான தொழில் வளர்ச்சி, வர்த்தகம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அந்த திட்டத்துக்கு இன்னும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை என்று கூறினார்.