நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஒருநாள் முன்னதாக இன்றுடன் நிறைவு பெறுகிறது.கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதும், எதிர்க்கட்சியினரின் அமளிகளுக்கு இடையே மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டிய முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து விட்டது.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா, ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது தொடர்பான தேர்தல் சீர்திருத்த மசோதா, பிறப்பு இறப்பு தேதியை இதர ஆவணங்களுடன் இணைக்கும் மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனால் மறுதேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க அரசுத் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.