பாஜக நாடாளுமன்ற குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் மற்றும் எதிர்க்கட்சியினரை எதிர்கொள்வது குறித்து பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 7-ம் தேதி நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், அவர் இம்முறை பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.