வழிபாட்டுத்தலங்களை அவமதிப்பவர்களை பொதுவெளியில் தூக்கில் இட வேண்டும் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபில் கடந்த 2 நாட்களில், பொற்கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ஒருவரும், கபுர்தாலாவில் சீக்கிய கொடியை அவமதித்தற்காக ஒருவரும் அடித்தே கொலை செய்யப்பட்டனர்.
வழிபாட்டுத்தலங்கள் அவமதிக்கப்பட்டதை பஞ்சாப் முதலமைச்சர் உள்பட முக்கிய தலைவர்கள் கண்டித்த போதும், இருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அனைவரும் மெளனம் காத்தனர்.
இந்நிலையில் மலேர்கோட்லாவில் (Malerkotla) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சித்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்றார்.