தேர்தல் சட்டத் திருத்த முன்வரைவு மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிப்போரிடம் அடையாளச் சான்றாக ஆதார் எண்ணைக் கோர அனுமதிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்வரைவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே மத்தியச் சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்.
ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதைத் தடுக்க ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை உதவும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் ஆளுங்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.