தேர்தல் சட்டத் திருத்த முன்வரைவை மக்களவையில் மத்தியச் சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்துள்ளார்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதைத் தடுக்க ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை உதவும் எனக் கூறப்படுகிறது.
இதற்கான சட்ட முன்வரைவை மக்களவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இதையடுத்து அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆதார் எண் வழங்காததைக் காரணம் காட்டி எந்த விண்ணப்பமும் மறுக்கப்படாது என்றும், ஏற்கெனவே பட்டியலில் உள்ள பெயர்கள் நீக்கப்படாது என்றும், அடையாளச் சான்றாக மற்ற ஆவணங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் இந்த முன்வரைவில் குறிப்பிட்டுள்ளது.