ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவி வரும் சூழலில் உலகம் முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை விரிவாக்கவும் வலுப்படுத்தவும் வேண்டிய தேவையுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பின் முதன்மை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தகுதி உடையவர்களில் 87 விழுக்காட்டினருக்கு ஒரு தவணைத் தடுப்பூசியும், 56 விழுக்காட்டினருக்கு இரண்டு தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் குறைவாக உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி இயக்கத்தை விரிவாக்கவும் வலுப்படுத்தவும் வேண்டியுள்ளதாக சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.