உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் ரவுடிக் கும்பல்களும், குற்றவாளிகளும் மாநிலத்தை விட்டு அஞ்சி ஓடியதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மதுராவில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முந்தைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்றார். 2017ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கியதால் இந்துக்கள் மீண்டும் சொந்த மாநிலத்துக்குத் திரும்பியதாக அவர் தெரிவித்தார்.
பாஜகவின் நாலரை ஆண்டுக்கால ஆட்சியில் மாநிலத்தில் எங்கும் வன்முறை தலைதூக்கியதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.