போதைப் பொருட்கள், ஆயுத கடத்தல், கள்ள நோட்டுகள் மற்றும் ஊடுருவல் ஆகியவை உள்நாட்டு பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வக வளாகத்தில் புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய அவர், அதிக தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதன் மூலம், பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றும், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு மாநிலமும் தடய அறிவியலுக்கென தனி கல்லூரிகளை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் விகிதம் பிற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளதாக கூறினார்.
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதன் மூலமே குற்றங்களை குறைப்பது சாத்தியமாகும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.