டெல்லியில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியதால் இரண்டரை இலட்சம் மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் அரசு பள்ளிகளை மேம்படுத்தவில்லை என்றும், ஏழைகளை என்றும் ஏழைகளாகவே வைத்திருக்கும் நோக்கில் மற்ற அரசுகள் வேண்டுமென்றே அவ்வாறு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
தமது அரசு ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து மேம்படுத்தியதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.