2022ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு, விமானவியல் துறைகளின் உற்பத்தி மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிற அளவை எட்டும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அவர், இப்போது இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மதிப்பு 85ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவுக்குத் தேவையான போர்த்தளவாடங்கள், கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் தெளிவாகக் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்க, இந்தியாவுக்குத் தயாரிக்க, உலகுக்குத் தயாரிக்க வரும்படி ராணுவத் தளவாடத் தயாரிப்பு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.