பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் புனித பிரார்த்தனை நடைபெறும் போது தடுப்பு வளையத்தைத் தாண்டி குதித்த ஒரு நபர் புனித வாளைப் பறிக்கவும் பிரார்த்தனையை இடையூறு செய்யவும் முயற்சித்த போது கோபம் கொண்ட சீக்கியர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த பரபரப்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு சீக்கியர் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீர விசாரணை நடத்த பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.