வைரஸ்கள் உள்ளிட்ட உயிரியல் ஆபத்துகள், அதனை எதிர்த்து போரிடுவதற்கான கருவிகளை உருவாக்குவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள, நவீன பாதுகாப்பு ஆய்வகத்தை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.இ. நிறுவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் மேம்பட்ட உயிரியல் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் அமையவுள்ள இந்த ஆய்வகத்தில், ஆபத்தான வைரஸ்கள், மனிதர்கள் மீதான அதன் தாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இது தொடர்பாக தெரிவித்த டி.ஆர்.டி.இ. இயக்குநர் மன்மோகன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வைரஸ் தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான அச்சுறுத்தல் உலகளவில் நிலவும் நிலையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.