குஜராத் மாநிலம் ஆஞ்ச் மஹால் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
கோகபா என்ற கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர வெடிச்சத்தத்தையடுத்து தீ விபத்து நேரிட்டது.
இந்த தீ விபத்தில் 30 தொழிலாளர்கள் காயம் அடைந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 23 தொழிலாளர்கள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதர தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிறுவனம் சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. தீ யின் தாக்கம் அடங்க இரண்டு நாட்களான பிறகே உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டன.