தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையர்களை அழைத்து பிரதமரின் முதன்மை செயலர் ஆலோசனை நடத்தியது முறையற்றது என்ற பேச்சுக்கே இடமில்லை' என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுடன் போதுமான அளவுக்கு விலகியிருந்துதான் ஆலோசனையில் பங்கேற்றதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற மூன்று தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது என்பது உள்ளிட்ட 4 முக்கிய சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையர்களை அழைத்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தினால் எப்படி முறையான தேர்தல் நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.