நமது பாரம்பரியக் கட்டடங்களை இடிக்கத் தேவையில்லை என்றும், தேவைப்பட்டால் அவற்றைப் புதுப்பித்துக் கட்டிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற அனைத்திந்திய மேயர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், அனைத்து மேயர்களும் தங்கள் நகரத்தை தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காசியில் நடைபெறும் இந்த மாநாடு இந்திய நகரங்களின் வளர்ச்சியில் மிக முதன்மையானது என்றும், காசியின் வளர்ச்சி மற்ற நகரங்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், உள்ளூர்த் திறன்கள் மற்றும் தயாரிப்புகள் ஒரு நகரத்தின் அடையாளமாக எப்படி இருக்கும் என்பதைக் காசி போன்ற நகரிலிருந்து அறிந்துகொள்ளலாம் என்றும் பிரதமர் கூறினார்.