நடப்பாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி 8 புள்ளி 4% என்ற அளவில் உள்ளதாகவும், இந்தியா அதிவேகத்தில் வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்பது நிரூபணமாகி வருவதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக டெல்லியில் ஃபிக்கி (FICCI) அமைப்பின் மாநாட்டில் பேசிய அவர், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை இந்தியா தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கடந்த 7 ஆண்டுகளில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருப்பதை விமர்சிப்பவர்களே ஒப்புக்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய அரசு மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என தெரிவித்த அமித்ஷா, சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தங்களுடைய நோக்கத்தில் தவறில்லை என கூறினார்.