பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பேசிய பிரதமர் மோடி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த குழு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்து ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் டிசம்பர் மாதம் சர்ப்பித்தது.குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21- ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக அமலுக்கு வர உள்ளது.