கொல்கத்தாவின் துர்க்கை பூஜையை மனிதகுலத்தின் கலாசார பாரம்பரிய பட்டியலில், ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலாசார அமைப்பான யுனெஸ்கோ இணைத்துள்ளது.
இதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மிகுந்த பெருமை அடைவதாக தெரிவித்த மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். துர்க்கா பூஜை நம் நாட்டின் மரபின் சிறந்த வெளிப்பாடு என்றும் அனைவரும் இதனை அவசியம் அனுபவிக்க வேண்டிய ஓர் அனுபவம் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விஜய தசமிக்கு முன் பத்து நாட்களுக்கு துர்க்கை பூஜை கொண்டாடப்படுகிறது. கங்கை ஆற்று மண்ணில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர் மற்றும் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுவது வழக்கம். கொல்கத்தா நகரம் விழாக்கோலம் பூண்டுவிடுகிறது. சாதி மதம் அப்பாற்பட்டு இங்கு துர்க்கை பூஜை கொண்டாடப்படுகிறது.