நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் நாட்களை குறைக்கும் திட்டம் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலகாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், பணவீக்கம், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்ததால், அதற்கு திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், அதில் எதிர்கட்சியினர் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
பிறகு ஏன் இவ்வாறு கோரிக்கை வைக்கின்றனர் என்று அவர் கேள்வி எழுப்பினார். விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், நாளையிலிருந்து விவாதத்தில் எதிர்கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று முடங்கியது குறிப்பிடத்தக்கது.