மூன்று நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, தலைநகர் டாக்காவில் அந்நாட்டு முப்படைகள் சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை, குடியரசு தலைவர் சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, இரு நாடுகளும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக வங்கதேசத்தின் தந்தையாக கருதப்படும் ஷேக் முஜ்பூர் ரஹ்மான் நினைவிடத்திற்கு சென்று ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.