கேரளாவில் மாணவர்களுக்கிடையே ஆண், பெண் என்ற பாலின பாகுபாட்டை அகற்றும் விதமாக அரசுப்பள்ளி ஒன்றில் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆண்களை போல மேல் சட்டையும், பேண்ட்டும் வழங்கப்பட்ட நிலையில், அதை அணிந்துக் கொண்டு மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய அப்பள்ளியின் முதல்வர், இந்த சீருடை மாற்றம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்தாலோசித்த பிறகே அமலுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார். இந்த மாற்றத்தை தாங்கள் முழு மனதாக வரவேற்பதாகவும் விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் பங்கேற்க இந்த உடை மிகவும் வசதியாக இருப்பதாகவும் அப்பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.