செமிகண்டக்டர்கள், டிஸ்பிளே ஆகிவற்றை இந்தியாவில் தயாரிக்க ஆறாண்டுகளில் 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். செமிகண்டக்டர்கள், டிஸ்பிளே ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
ரூபே டெபிட் கார்டு, பீம் யூபிஐ ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க 1300 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன்மூலம் 22 இலட்சம் விவசாயிகள் பயனடைவர் என்றும் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார்.