எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய வகையில் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை உள்நாட்டில் தயாரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், எந்த நாடு, பாதுகாப்பு துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறதோ, அந்த நாடு தான் எதிரிகளை அழித்து வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று குறிப்பிட்டார்.
ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாகச் செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அது நம் பாதுகாப்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
போர்களில் இதுவரை பார்த்திராத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.நாமும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.