ஒமிக்ரான் பரவும் நிலையில் மக்களுக்கு கூடுதலாக தடுப்பூசி போட வேண்டுமா? அல்லது பூஸ்டர் போஸ் போட வேண்டுமா? என்பது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் பூஸ்டர் டோசுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதை போட வேண்டும் என தாக்கலான மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தாக்கலான உறுதி மொழிப்பத்திரத்தில் தடுப்பூசி தேசிய தொழில்நுட்ப குழு, தடுப்பூசி போடுவது பற்றிய தேசிய நிபுணர் குழு ஆகியன இது பற்றி ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகுதியான அனைவருக்கும் இரண்டு டோஸ் போட்டு முடிப்பது மட்டுமே அரசின் முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.