ஆந்திர மாநிலம் கர்னூலில், வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயி ஒருவர், அவற்றை தீ வைத்து எரித்தார்.
கர்னூரிலுள்ள விளைபொருள் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெங்காயத்தை விற்பனை செய்ய வந்திருந்தனர். அப்போது, ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு 350 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என வியாபாரிகள் கூறவே, ஆத்திரமடைந்த விவசாயி ஒருவர் தாம் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த வெங்காயத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.
மற்ற விவசாயிகளும் இதேபோன்று தீ வைத்து கொளுத்துவோம் எனக் கூறவே, விவசாயிகளை சமாதானம் செய்த அதிகாரிகள், 700ரூபாய் வாங்கித் தருவதாக உறுதியளித்ததை அடுத்து, வியாபாரிகளும் அதனை ஏற்றுக் கொண்டு குவிண்டால் வெங்காயத்தை 700ரூபாய்க்கு எடுத்துக் கொண்டனர்.