2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்து உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதன் 20ஆண்டு நிறைவையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் தொண்டும் தியாகமும் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.